Map Graph

அரசு மத்திய அச்சகம், சென்னை

அரசு மத்திய அச்சகம் தமிழகத்தில் சென்னையில் உள்ள அச்சகம் ஆகும். இங்கு தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறை உள்ளது. இந்த அச்சகத்தில் மாநில அரசின் அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அரசுப் பதிவுகளை பராமரிக்கும் பணியும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்த அச்சகத்தின் கட்டுப்பாட்டில் எட்டு கிளை அச்சகங்கள் மற்றும் எழுதுபொருள் கடைகள் இயங்கி வருகின்றன. 2017 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் 433 பெண்கள் உட்பட 1,646 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

Read article